தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். மேலும் 3 கார்கள், 1 லாரி விபத்தில் சேதமடைந்தது.
தொப்பூர் கணவாய் பகுதியில் லேம் நோக்கி சென்றுகொண்டு இருந்த கன்டெய்னர் லாரி கட்டமேடு கணவாய் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டு இருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு டாடா சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு தற்பொழுது தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருதனதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி. ஜோதிமணியை காணவில்லை; “கண்டா வரச்சொல்லுங்க” என தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்
undefined
நல் வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விபத்து நடந்த இடத்தில் உடனடியாக தொப்பூர் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் மூலம் அப்புற படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் - அரசுக்கு தினகரன் அறிவுரை
சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் 3 கார்கள், 1 லாரி என 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இந்த விபத்தில், புதுப்பட்டியைச் சேர்ந்த சிவா (வயது 33), வேப்பிலைப்பட்டியை சேர்ந்த ராஜவேல் (33), சாமிசெட்டிபட்டியை சேர்ந்த பச்சையம்மாள் (53) என 3 பேர் காயமடைந்தர். விபத்தால் சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.