125 தொகுதிகளில்.. எங்க பேசனுமோ அங்க பேசுவோம்..! திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் காங்கிரஸ்

Published : Oct 13, 2025, 10:07 AM IST
Selvaperunthagai

சுருக்கம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 தொகுதிகளில் போட்டியா என்ற கேள்விக்கு எங்களுக்கு தேவையான தொகுதிகள் தொடர்பாக டெல்லி தலைமையிடம் வலியுறுத்துவோம் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கட்சியில் பல்வேறு மூத்த தலைவர்களும், கூட்டணியில் எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கின்றனர். அவர்களை குறைசொல்ல முடியாது. அது அவர்களது விருப்பம். கட்சியின் தலைவரான என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது.

அண்மையில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எங்கள் கட்சியின் பொறுப்பாளர் 125 தொகுதிகளில் கட்சியை பலப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். அந்த 125 தொகுதிகளில் திமுக போட்டியிடும் இடமும் தான் அடங்கும். ஆனால் அதனை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை எங்களது தலைமைக்கு வற்புறுத்துவோம். எங்கள் கட்சியின் தலைமை, கூட்டணி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கான தொகுதி உறுதி செய்யப்படும்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசி தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் மக்கள் பிரச்சினைகளில் எந்த சமரசமும் இல்லாமல் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி வருகிறோம். கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தங்கள் விருப்பங்களை எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாங்கள் எங்கள் பிரசாரத்தை கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டோம். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நாங்கள் பிரசாரத்தை நிகழ்த்தி வருகிறோம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!