*தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !*

 
Published : Oct 14, 2016, 11:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
*தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை : 464 மி.மீ., பெய்ய வாய்ப்பு !*

சுருக்கம்

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை சராசரியாக, 464மி.மீ., பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

இந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இதில், மற்ற மாநிலங்களை விட, 20 சதவீதம் கூடுதலாக தமிழகத்தில் மலை பெய்ய வாய்ப்புள்ளதாக, ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டில் 32 மாவட்டங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையளவு குறித்து, வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கணக்கிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியான மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்த ஆண்டு சராசரியாக, 464மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட, 19 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ பெய்யவும் வாய்ப்புள்ளது.
வரும், 20ம் தேதி முதல், மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஏரிகள், குளங்களை தூர்வாரி பரமாரித்து, நிலத்தடி நீரை சேமிக்கலாம். விவசாயிகள் பண்ணை குட்டை, வரப்பு வெட்டி பயிர் விளைச்சலை பெருக்குவதோடு, மண்வளத்தையும் பாதுகாக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் பெய்த சராசரி மழையளவு

2011 - 1100 மி.மீ.,

2012 - 371 மி.மீ.,

2013 - 535 மி.மீ

2014 - 733 மி.மீ

2015 - 690 மி.மீ

தற்போது, தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை

மாவட்டம்                         சராசரி   எதிர்பார்க்கும் மழையளவு (மி.மீ.,) (மி.மீ.,)

கோவை                              328          343

திருப்பூர்                              314          323

ஈரோடு                                 314          315

சென்னை                            788          731

வேலூர்                                348          348

திருவண்ணாமலை         445          432

சேலம்                                  369          366

நாமக்கல்                             291          278

தர்மபுரி                                329          355

கிருஷ்ணகிரி                      289          302

திருச்சிராப்பள்ளி            390          374

தஞ்சாவூர்                            549          530

கரூர்                                      314          344

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!