நெல்லையில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி

By Dinesh TG  |  First Published Sep 29, 2022, 7:15 PM IST

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூரி முடிந்து வீடிட்ற்கு சென்ற சகோதரிகள் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அடுத்த கீழபாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த ராமர். இவரது மகள்கள் சங்கீதா (வயது 19), வைஷ்ணவி (19), சகோதரிகளான இவர்கள் இருவரும் நெல்லை பழைய பேட்டையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றுவிட்டு அவர்களது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 

நடிகர் சூரியின் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

Latest Videos

undefined

ஆலங்குளம் சாலையிலுள்ள தனியார் மில் அருகே வந்த போது, எதிரே மில்லுக்கு வந்த லாரி, வலதுபுறமாக திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது லாரி மோதியுள்ளது. இதில் லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கி மாணவி சங்கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் வைஷ்ணவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் விபத்து குறித்து முக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், அதன்பேரில் விரைந்து வந்த முக்கூடல் காவல் துறையினர் சங்கீதா உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த வைஷ்ணவியையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி மரணம்: பெற்றோர் அச்சம்

இதனைத் தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!