பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவி..!

Published : Sep 29, 2022, 05:49 PM IST
பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவி..!

சுருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவரது மகள் வரலெட்சுமி.  14 வயதாகும் இவர் வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகில் வசித்து வரும் கன்னியப்பன் என்பவரது மகள் வரலெட்சுமி.  14 வயதாகும் இவர் வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட  நேரம் தூக்கி விட்டதால், பள்ளிக்கு செல்ல முடியாமல், விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் கோபத்தில் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

மேலும் படிக்க:பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசுவோம்..! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

வீடு திரும்பிய அவரது பெற்றோர் தூக்கில் தொங்கிய மகளை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:ஆன்லைனில் ட்ரோன் கேமிரா ஆர்டர் போட்ட இளைஞருக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கு பார்ச்சல்.. 85 ஆயிரம் அபேஸ்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 14 December 2025: முதல்வர் ஸ்டாலினின் பயணம் முதல் முட்டை விலை உயர்வு வரை.. இன்றைய முக்கிய செய்திகள்
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்