உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ரத்து… அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!!

By Narendran SFirst Published Dec 3, 2022, 12:11 AM IST
Highlights

அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணை (நிலை) எண்‌. 248, உயர் கல்வித்துறை, நாள்‌. 08.11.2022ன் படி அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மறறும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள உதவிப்‌ பேராசிரியர்களுக்கான 2,331 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண்‌ . 12/2019, நாள்‌. 28.08.2019 மற்றும்‌ 04.10.2019) ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: இது உண்ணாவிரத போராட்டமா? இல்லை உண்ணும் போராட்டமா? வெளியான வீடியோவால் கட்சி தலைமை அதிருப்தி!!

இதனையடுத்து 2331 உதவிப்‌ பேராசிரியர்கள்‌ காலிப்பணியிடங்கள்‌ நிரப்ப ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண்‌ . 12/2019, நாள்‌. 28.08.2019 மற்றும்‌ 04.10.2019 அரசாணை (நிலை) எண்‌, 246, உயர்கல்வித்துறை, நாள்‌. 08.11.2022-ன்படி ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 4,000 உதவிப் பேராசிரியர்‌ காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை (Notification) ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ வெளியிடப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 16 பேர் பணியிடமாற்றம்... அறிவித்தது தமிழக அரசு!!

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!