கோவை சௌந்தர் கொலை வழக்கு.. இரு திருநங்கைகள் உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை!

By Ansgar R  |  First Published Jul 7, 2023, 4:57 PM IST

கோவை தொட்டிபாளையத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருடைய வீட்டில் மூன்று பேர் குடியிருந்தனர். அவர்கள் ஆட்டோ டிரைவர் மைக்கேல், ராகினி மற்றும் வெண்பா என்கின்ற இரு திருநங்கைகள் ஆவர்.


கோவை பீளமேடு பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில் சௌந்தர் என்ற 23 வயது வாலிபர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வழக்கில் தொடர்புடைய மூவருக்கு தற்பொழுது சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை தொட்டிபாளையத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருடைய வீட்டில் மூன்று பேர் குடியிருந்தனர். அவர்கள் ஆட்டோ டிரைவர் மைக்கேல், ராகினி மற்றும் வெண்பா என்கின்ற இரு திருநங்கைகள் ஆவர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பாக்கியலட்சுமி மகன் இளங்கோ மற்றும் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சௌந்தர் ஆகியோருக்கும், ஆட்டோ டிரைவர் மைக்கில் மற்றும் ராகினி வெண்பா உள்ளிட்ட திருநங்கைகளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கசந்து போன கல்யாண வாழ்க்கை.. ஆத்திரத்தில் புதுப்பெண்ணை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன? 

வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், மைக்கேல் கத்தியால் குத்தியதில் இளங்கோவன் மற்றும் அவருடைய நண்பர்கள் சௌந்தர் உள்ளிட்ட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சௌந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு தலைமறைவாக இருந்த மைக்கேல், ராகினி மற்றும் வெண்பா ஆகிய மூவரையும் பீளமேடு போலீசார் கைது செய்தனர். 

அந்த மூவரும் கொலை செய்தது உறுதியானது, இந்த மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது ஆட்டோ ஓட்டுனர் மைக்கில் மற்றும் ராகினி, வெண்பா ஆகிய இரு திருநங்கைகளுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள் : கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி! காதலன் செய்த பகீர் சம்பவம்!

click me!