இரண்டு குழந்தைகளுக்கு தாயான கோவையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய் பால் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளார்.
கோவை வடவள்ளி டி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, இவருக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 7 மாதங்களாக தாய் பாலை தானமாக வழங்கி வருகிறார். தானங்களில் உயர்ந்த தானம் அன்னதானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் என பலரும் பல வகையான தானங்களை விளக்குவது உண்டு. ஆனால், ஊட்டச்சத்து குறைபாடுடைய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் ஒன்று மட்டுமே தீர்வாக உள்ளது.
தூத்துக்குடியில் மகள் காதல் திருமணம்; பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் சோகம்
தாய்ப்பாலின் தேவை குறித்து அறிந்த ஸ்ரீவித்யா தனது குழந்தைக்குப் போக மீதமாக உள்ள தாய்ப்பாலை தானமாக வழங்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் கலந்து பேசி இருவரும் தாய்பாலை தானமாக வழங்க முன்வந்தனர். அதன்படி மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் தாய்பால் தானம் வழங்கி வருகிறார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்
தற்போது வரை கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். இவரை பாராட்டி ஏசியா புக்ஸ் ஆப் ரெகார்ட் சான்று வழங்கி இவரை கௌரவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீவித்யா கூறுகையில், தாய் பால் தானம் செய்வதால் நமது உடலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தொடர்ந்து பால் சுரப்கு இருந்துகொண்டே இருக்கும். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நாம் செய்யும் உதவி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். அனைவரும் தாய்பால் தானம் வழங்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.