Sri Sri Ravi Shankar: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கம்

Published : Jan 25, 2023, 03:06 PM ISTUpdated : Jan 25, 2023, 04:39 PM IST
Sri Sri Ravi Shankar: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கம்

சுருக்கம்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரிஹன்நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ ஆந்திர கபாலீஸ்வரர் ஸ்வாமி கோவில் நடக்கும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்தார்.

ஈரோடு அருகே வந்தபோது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்,  பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தார். ஹெலிகாப்டர் உகினியம் பகுதியை அடைந்தபோது தரையிறக்கப்பட்டது.

50 நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது என்றும் இந்தச் சிறிது நேர இடைநிறுத்தத்திற்குப் பிறகு ரவிசங்கர் திட்டமிட்டபடி கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார் என்று வாழும் கலை அமைப்பின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அவருடன் பயணித்த நால்வருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அந்த அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரோடு மூதாட்டி கொ*லை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான அதிர்ச்சி காரணம்! சிக்கிய நபர்?
ஒரு மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தின் பின்னணி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!