
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வன சரகங்கள் உள்ளன இதில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றினை கடந்து தான் கல்லாம்பாளையம் தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.
தூத்துக்குடியில் ஹெராயின் என்று கூறி இளைஞர்களிடம் யூரியாவை விற்ற வாலிபர் கைது
இந்நிலையில் நேற்று கல்லாம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சிலர் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்டவுடன் அதிர்ச்சியடைந்து முதலையை தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர்.
குடியிருப்பு பகுதியில் கார் ஓட்டி பழகியபோது விபரீதம்; சைக்கிளில் சென்ற சிறுவன் பலி
பிறகு முதலை சிறிது நேரம் கழித்து மாயாற்றில் இறங்கி சென்றது. இதனால் தெங்குமரகாடா மற்றும் கல்லாம்பாளையம் பகுதி பொதுமக்கள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் செல்லும் போது கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.