கோவை மாவட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு கஞ்சா வியாபாரிகள் மீது நடடிவக்கை எடுக்காமல், அவர்களை ஊக்குவித்து வந்த கோவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய மகேந்திரனை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்திரபாபு(வயது33) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சந்திரபாபுவிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது கூட்டாளிகள் ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை
undefined
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக கஞ்சாவை கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அப்போது ஈரோடு மாவட்டம் சைபர் கிரைம் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன் என்பவர்தான் இந்த கஞ்சா கும்பலுக்கு பின்னணியில் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா கும்பல் பிடிபடாமல் இருக்க மாமூல் வசூலித்து அவர்களுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது. மகேந்திரன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது கஞ்சா கும்பலிடம் இருந்து மாமூல் வசூலித்து கஞ்சாவை புழக்கத்தில்விட உடந்தையாக செயல்பட்டதைத் தொடர்ந்து அவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.