ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலி... அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!!

By Narendran S  |  First Published Jan 18, 2023, 10:01 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 50ஆண்டு கனவு ! போடிநாயக்கனூர் முதல் சென்னைக்கு நேரடி ரயில் சேவை: பிப்ரவரி 19ல் தொடக்கம்

Latest Videos

undefined

அதன்படி பிப்.27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச்.02 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜன.31ம் தேதி முதல் தொடங்கும் என்றும் வேப்புமனு தாக்கல் செய்ய பிப்.7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுவை பரிசீலனை செய்ய பிப்.8 ஆம் தேதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற பிப்.10ம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிப்பு... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக் கல்வித்துறை!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அம்மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 

click me!