பொது அமைதியை குலைக்கும் சில நபர்கள்.. ஈஷா நிர்வாகி தினேஷ் அளித்த புகார் மனு - நடந்தது என்ன?

Ansgar R |  
Published : Sep 28, 2024, 04:07 PM IST
பொது அமைதியை குலைக்கும் சில நபர்கள்.. ஈஷா நிர்வாகி தினேஷ் அளித்த புகார் மனு - நடந்தது என்ன?

சுருக்கம்

Coimbatore Isha : ஈஷாவிற்கு எதிராக தொடர்ந்து சிலர் அவதூறு பரப்பி வருவதாக கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி, அங்குள்ள பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க தொடர்ச்சியாக முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்வர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று கோயம்பத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது..

தங்களை தாங்களே சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போலியாக சொல்லிக்கொண்டும் திரியும் நபர் தான் பியூஷ். இந்துகளின் கலாச்சாரம், ஆன்மீக மரபுகள் மற்றும் அதை சார்ந்து இயங்கும் நபர்கள் மீது அவதூறு பரப்புவது தான் இவருடைய முழு நேர தொழிலாக உள்ளது. இவர் ஈஷாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை நாகரீகமற்ற முறையில் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையே தனது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இறுதி வரை இயற்கை விவசாயம்.. பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி காலமானார் - மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல்!

இந்நிலையில், இப்பொது கோவையில் செயல்பட்டு வரும் உதிரி அமைப்பினர்களும் இவருடன் சேர்ந்து கொண்டு, புது புது பிரச்சனைகளை மற்றும் அவதூறுகளை உருவாக்கும் முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். கோவையை சுற்றியுள்ள இந்த உதிரி அமைப்புகள் தான், சில மாதங்களுக்கு முன்பு ஈஷாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததும், அவர்களை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, உள்ளூர் மக்கள் தடுத்து திருப்பி அனுப்பியது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் வணங்கும் ஆதியோகி மற்றும் லிங்கபைரவி குறித்து மிகவும் கொச்சையாக அவதூறு பரப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர் பேசியுள்ள கருத்துக்கள் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் மனதை பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது.

இதன் அடுத்தக்கட்டமாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஆர்ப்பாட்டம் என பல வழிமுறைகள் மூலமாக மக்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் இயங்கும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்த உதிரி அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஷ் ராஜா தெரிவித்துள்ளார். 

Tamil Nadu Cabinet Reshuffle: கைமாறும் உயர்கல்வி! பால் வளம்! புதிய அமைச்சர்கள் யார்? வெளியான புதிய தகவல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!