Coimbatore Corporation : கோவையில் எல்லைகளை விரிவாக்கும் பொருட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
கடந்த 9ம் நூற்றாண்டு வரை சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள் என்று பலரின் ஆட்சிக்கு கீழ் இருந்து வந்த நகரம் தான் கொங்கு. அந்த நகரம் தான் பிரிட்டிஷ்காரர்களுடைய ஆட்சிக்கு பிறகு "கோயம்புத்தூர்" என்று பெயர் பெற்றது. "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் கோவையில் கடந்த 19ஆம் நூற்றாண்டில் இருந்து ஆடைகள் சம்பந்தமான பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விரிவடையும் எல்லை
இந்த சூழலில் ஏற்கனவே சுமார் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கோவையின் எல்லையை இப்போது சுமார் 440 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவு படுத்துவதற்கான பணிகளை துவங்க அம் மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இது குறித்து ஒரு முன்மொழிவையும் தமிழக அரசுக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுப்பி இருக்கிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியான அதற்குள் 7 நகராட்சிகள், 12 ஒன்றியங்கள், 33 பேரூராட்சிகள், 228 கிராம ஊராட்சிகள் மற்றும் ஒரு மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவை இருக்கின்றது.
சென்னையில் சொந்த வீடு விலை இவ்வளவு தானா.? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி.?
தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைகளையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அதன்படி அங்குள்ள பேரூர், இருகூர், மதுக்கரை, பள்ளபாளையம் வெள்ளலூர் உள்ளிட்ட பேராட்சிகளையும் குருடம்பாளையம், சோமயம்பாளையம், போரூர், செட்டிபாளையம், கீரநத்தம், நீலாம்புரி மயிலம்பட்டி மற்றும் பட்டணம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளையும் இணைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் இரண்டு மடங்காக கோவையின் இல்லை விரிவடைய வாய்ப்புகள் இருக்கிறது.
முன்னதாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில், கோவையின் நகர்ப்புற பகுதிகளுக்கு அருகிலுள்ள உள்ளாட்சிகளை அதனுடைய மாநகராட்சியோடு இணைக்கலாமா? என்று அறிவுறுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து இப்போது கோவைக்கு அருகாமையில் உள்ள, அதாவது சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையிலான சுற்றளவுக்குள் அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்து கேட்பு நிகழ்வை ஒன்றை நடத்தி இருக்கிறது கோவை மாநகராட்சி.
இந்த சூழலில் தான் கோவையின் நகர் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு நகராட்சி, நான்கு பேரூராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை இணைத்து அதன் எல்லைகளை விரிவுபடுத்த ஆவணம் செய்து அதற்கான பரிந்துரையை முன்மொழிந்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.