தமிழக அமை்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.
2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது 3 ஆண்டுகளைக் கடந்து 4வது ஆண்டை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதனிடையே தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 15 மாதங்கள் சிறை தண்டனை பெற்று அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.
அவருடன் சேர்த்து நாசர், ராஜேந்திரன், கோவி.செழியன் உள்ளிட்டோரும் ஆளுநர் முன்பாக பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டனர்.
undefined
துறைகள் ஒதுக்கீடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே நிர்வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரா.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், கோவி.செழியனுக்கு உயர்கல்வி துறையும், மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணைமுதல்வர் உதயநிதி
திமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தது போல விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.