Ramachandran : தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அன்று தொடங்கி இன்று வரை தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோ.வி செழியன் தான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2021ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியை அமைத்ததில் இருந்து இதுவரை ஐந்து முறை தமிழக அமைச்சரவையானது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ஒரு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் புதிய பணிகளில் சேர்க்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை நோக்கி திராவிட முன்னேற்ற கழக அரசு பயணித்து வருகிறது.
undefined
உதயநிதிக்கு இத்தனை கோடி கடன் இருக்கா.? வெளியான சொத்து பட்டியல்
இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிறையில் இருந்து விடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில்துறை, தற்பொழுது டிஆர்பி ராஜாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை தற்பொழுது தங்கம் தென்னரசுவிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறையும், பழனிவேல் தியாகராஜனுக்கு இப்போது தகவல் தொழில்நுட்ப துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது 47 வது வயதில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இப்படி அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி செழியன் செயல்பட்டு வந்தார், ஆனால் அவர் அமைச்சரவையில் இணைந்துள்ளதால் தலைமை கொறடா பணி காலியாக இருந்த நிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் தற்போது அமைச்சரவை பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழகத்தின் தலைமை கொறடாவாக பதவியேற்றிருக்கிறார்.