உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்

By Raghupati RFirst Published Oct 28, 2022, 7:56 PM IST
Highlights

கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது.

கோவை கார் குண்டு வெடிப்பு:

இதையடுத்து பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜமீஷா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெடிகுண்டு தயார் செய்வதற்கான பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்  ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட  வேதிப்பொருட்கள், பேட்டரிகள் மற்றும் வயர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களும், ஜிகாத் கொள்கைகள் தொடர்பான புத்தகங்களும் கிடைத்துள்ளன.

தேசிய புலனாய்வு முகமை:

சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும்,  விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதகாவும், தேசிய புலனாய்வு முகமையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை கிளப்பியது. அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த அடுத்த நாளே கோவை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மக்களிடையே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது என்றும் கூறினார்கள். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக, மையமாக மாறி விடாமல் கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது என்றும் பாஜக, அதிமுக, வலதுசாரிகள் என பலரும் விமர்சித்திருந்தனர்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

 ஜமீஷா முபின்:

இந்நிலையில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் இறந்த ஜமீஷா முபின் செயல்பாடுகள் 2019ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகியது பொறியியல் பட்டதாரியான இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும் சில வருடங்களுக்கு முன்னர் கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவின் போது காரில் வெடிகுண்டுடன் தற்கொலை படையாக மாறி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது.

மத்திய உளவுத்துறை:

காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு

கொழும்பு பயங்கர சம்பவம்:

அதன் பிறகு 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் 6 தேவாலயங்கள் 3 சொகுசு விடுதிகளில் குண்டு வெடிப்புகள் நடந்தனர், இதில் 269 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்தது 8 பயங்கரவாதிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை படையாக செயல்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் பேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது.தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தமிழக காவல்துறை:

தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!