நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் துப்பாக்கி பட பாணியில் வரவேற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பெயரில் சிவப்பு வட்டம் குறியிட்டு டேக் செய்து கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் துப்பாக்கி பட பாணியில் வரவேற்றுள்ளார்.
I am waiting 😎 pic.twitter.com/kYmwrtWY1U
— Singai G Ramachandran - Say No to Drugs and DMK (@RamaAIADMK)இதுதொடர்பாக சிங்கை ராமசந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, ஐ அம் வெயிட்டிங் (I am Waiting) என பதிவிட்டுள்ளார்.