போர் பரணி இசைத்துவிட்டது... வெற்றி வாகை சூட தயாராகிவிட்டனர்; பாகுபலி ஸ்டைலில் தொண்டர்களை குஷி படுத்திய அமைச்சர

By Velmurugan s  |  First Published Mar 22, 2024, 7:32 AM IST

இந்தியாவிற்கு மாற்றம் கொண்டுவர இந்திய தலைவராக முதலமைச்சர் மாறி இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக  செயற்குழுக் கூட்டம் அதன் மாவட்ட செயலாளர்களும், மாநில அமைச்சர்களுமான தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் ஆயத்த பணிகள் மற்றும் வரும் 23ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் 27ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரசார வருகை குறித்தும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சிறப்பான வருகை குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் நம்மீது நிறைந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை ஒருபோதும் நாம் இழந்ததில்லை. போர் பரணி இசைத்து விட்டது. தொண்டர்கள் வியூகம் வகுத்து வெற்றி வாகைசூட தயாராகி விட்டனர். ஏப்ரல் 19 அறிவிப்பு இதை வெளிக்காட்டும்.

Tap to resize

Latest Videos

undefined

ஓபிஎஸ்.ன் சுயேட்சை முடிவுக்கு காரணம் என்ன? சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றபின் தினகரன் சொன்ன தகவல்

இந்திய திருநாடு தேர்தல் திருவிழாவிற்கு தயாராகி விட்டது. இந்தியாவிற்கு மாற்றம் கொண்டுவர இந்திய தலைவராக முதலமைச்சர் மாறி இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளார். பிற கட்சிகள் கூட்டணியை முடிவெடுக்க முடியாமல் திணறிவரும் சூழ்நிலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசார பயணத்தையும் தொடங்கியுள்ள ஒரே இயக்கம் திமுக தான்.

2019 இல் கலைஞர் இல்லாத போது வெற்றிக் கூட்டணியை உருவாக்கி 38 இடங்களில் வெற்றி பெற்று 2024லும் சிறு குறைபாடுகூட இல்லாமல் தொடர்ந்து 3 முறை  ராஜதந்திர கூட்டணியை கட்டமைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெற பாடுபட வேண்டும். இனிவரும் காலங்களில் விருதுநகர், தென்காசி மற்றும் இராமநாதபுரம் தொகுதிகளை மாற்றுகட்சியினர் மறக்கும் அளவிற்கு திமுக கூட்டணியின் வெற்றி இருக்க வேண்டும் என்றார். 

15 தொகுதி கேட்டோம்... பலத்தை நிரூபிக்க ராமநாதபுரத்தில் நானே போட்டியிடுகிறேன்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், தேர்தல் குறித்த தெளிவு தொண்டர்களுக்கு வேண்டும். அது திமுக தொண்டர்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் எந்த கூட்டணியும் ஒற்றுமையாக இல்லாததால் திமுக புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தேர்தல் முடிவு அன்று நாம் வெற்றி பெற்று வீட்டிற்கு செல்வோம். மற்றவர்கள் தோல்வி சோகத்தில் இரண்டு நாட்கள் கழித்துத்தான் வீட்டிற்கு செல்வார்கள். எந்த ஒன்றியம், நகரத்தில் ஓட்டு குறைகிறோ அவர்கள்மீது தலைமை நடவடிக்கை எடுக்கும். எனவே அதிக ஓட்டு வாங்கி இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் ஸ்டாலின் என பேர் வாங்க வேண்டும் என்றார்.

click me!