ரஞ்சித்துக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…! என்ன காரணம்…?

Published : Sep 26, 2021, 08:13 AM IST
ரஞ்சித்துக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…! என்ன காரணம்…?

சுருக்கம்

இந்திய குடிமை பணிக்கு தேர்வாகி இருக்கும் மாற்றுத்திறனாளி ரஞ்சித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை: இந்திய குடிமை பணிக்கு தேர்வாகி இருக்கும் மாற்றுத்திறனாளி ரஞ்சித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளதாவது:

அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள். சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துகள்.

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் அவர்கள் தேர்வு பெற்றதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம், முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.

வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு ஆகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன் என்று தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!