
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48-வது உலகத்திறன் போட்டியில் (World Skills Competition) பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பாராட்டினார். இந்நிகழ்வின் போது, சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்குச் சிறப்பு ரொக்கப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். (காட்சிகள் உதவி: செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு)