அன்று தொடக்கம்! இன்று நிறைவு! மும்பை செல்லும் முதல்வர் ஸ்டாலின்! இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு!

By vinoth kumarFirst Published Mar 16, 2024, 12:38 PM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார். 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். ராகுல் காந்தி இந்த நீதிப் பயணம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராகுல்காந்தியின் யாத்திரை இன்று தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. அவர் நாளை  மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவித்தில் தனது யாத்திரையை நிறைவு செய்கிறார். 

Latest Videos

பின்னர் அன்று மாலை மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்ட பிறகு இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவு செய்து வைக்கிறார்.  முன்னதாக கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!