தலைக்கேறிய கஞ்சா போதை.. 10 வயது சிறுவனுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கொடூரமாக கொலை செய்த பிளஸ் டூ மாணவன்!

By vinoth kumar  |  First Published Mar 16, 2024, 11:51 AM IST

சிறுவன் கிடைக்காததால் வேதனை அடைந்த பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை இறங்கிய போலீசார் சிறுவனை அழைத்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறிய 12ம் வகுப்பு மாணவன் இளங்கோவிடம் விசாரணை நடத்தினர். 


புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தலால் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தருமபுரியில் 10 வயது பள்ளி சிறுவன் ஓரினச்சேர்க்கை தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதா. இவர்களது மகன் பொன்னரசு (10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மதியம் 12 மணி முதல் சிறுவனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதே வேலையில் சிறுவனை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் அழைத்து சென்றதாக அதனைப் பார்த்த சிலர் கூறியுள்ளனர். மாலை வரை சிறுவன் கிடைக்காததால் வேதனை அடைந்த பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை இறங்கிய போலீசார் சிறுவனை அழைத்து சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறிய 12ம் வகுப்பு மாணவன் இளங்கோவிடம் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: அண்ணியை மடக்கிய கொழுந்தன்.. ரூட் மாறியதால் ரோட்டிலே வைத்து என்ன செய்தார் தெரியுமா?

அந்த சிசிடிவி பதிவில் சிறுவன் பொன்னரசுவை இளங்கோ அழைத்துச் சென்றதும் சிறுவன் இல்லாமல் இளங்கோ மட்டும் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து இளங்கோவிடம் போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில் சிறுவனை என்ன செய்தான் என்பதும் எதற்காக கொன்றான் என்பதும் அம்பலமானது. சிறுவன் பொன்னரசுக்கு தான் பாலியல் தொல்லை கொடுத்தது ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தியதாக தெரிவித்த இளங்கோ அதை சிறுவன் வெளியே கூறினால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என பயந்து அவனை அருகில் உள்ள ஊர் தலைவரின் விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு வந்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இளங்கோவனின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவன் கூறிய கிணற்றுக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு  தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடியிருந்த பொன்னரசுவின் உறவினர்கள் சிறுவனை கொலை கொடூரனுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:  திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிப்படுகொலை.. என்ன காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்!

பின்னர் காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் உடலை குடும்பத்தினர் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர். சிறுவனைக் கொன்ற மாணவன் இளங்கோ முழு நேரமும் கஞ்சாவுக்கு  அடிமையாகி அதன் போதையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவன் மீது வன்கொடுமை, ஆள் கடத்தல், கொலை வழக்கு என மூன்று பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இறந்த சிறுவன் சின்னத்திரை பிரபல பாடகர் மூக்குத்தி முருகனின் உறவினர் என்பது குறிப்பிடதக்கது.

click me!