மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது - அமைச்சர் திட்டவட்டம்

By Velmurugan s  |  First Published Mar 16, 2024, 12:01 PM IST

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது. அதே போன்று கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது தான் எங்கள் எண்ணம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய இரு புத்தகக் கடைகளில் இரண்டு கடைகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திறந்து வைத்தார்.

Tap to resize

Latest Videos

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடல்கள் சார்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். மொழி பெயர்த்துள்ளோம். அந்த புத்தகத்தை எல்லாம் குறைந்தபட்சம் 100 இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் டிபிஐ அலுவலகத்திற்கு தேடி வந்து வாங்குவதை காட்டிலும். புதிதாக  கொண்டு வருவதை பெற்றுக் கொள்ளும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். 

தலைக்கேறிய கஞ்சா போதை.. 10 வயது சிறுவனுக்கு ஓரின சேர்க்கை தொல்லை.. கொடூரமாக கொலை செய்த பிளஸ் டூ மாணவன்!

தற்போது  யாரும் பார்க்காத வ.உ.சி புகைபடத்துடன் கூடிய  புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொன்றையும் புதிதாக கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சென்னையில்  ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால்  அமைத்துள்ளோம். இதே போல  திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் ஸ்டால் அமைத்துள்ளோம். 

கே.எஸ்.அழகிரியின் ஆதரவளரான மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் நீக்கம்.. செல்வப்பெருந்தகை அதிரடி!

பள்ளி மாணவனாக இருக்கும்போது இங்கு தான் புத்தகங்கள் வாங்கினேன். அந்த நினைவுகள் இப்போதும் இருக்கிறது. அமைச்சர் என்பதை தாண்டி திமுககாரனாக புதிய கல்வி சட்டத்தை எதிர்க்கக் கூடியவர்கள் தான். தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். அண்மையில் மத்திய அமைச்சரை நான் நேரில் சந்த்தித்த போது கூட கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

மத்திய அரசின் PM Shri பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். குழு அமைத்து அதில் நம்முடைய மாநிலத்திற்கு என்ன தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு கல்வி திட்டம் உருவாக்கி உள்ளோம் என்றார்.

click me!