தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை!!

By Narendran SFirst Published Jan 25, 2022, 10:15 PM IST
Highlights

தமிழகத்தில் இரவு ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் இரவு ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரம் தொட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,48,469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,055 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது.

இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இன்றும் 30 ஆயிரத்திற்கு குறையாமல் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீடிப்பது குறித்து நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை நீட்டிப்பது நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

click me!