சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்... தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

Published : Feb 28, 2023, 04:48 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்... தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

சுருக்கம்

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பள்ளி மாணவர்கள் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் சூர்யா, ரபீக் மற்றும் விஜய் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளி மாணவர்கள் மீது மோதிய கார்.. சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டு 3 பேர் பலி.!

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக், விஜய் மற்றும் சூர்யா ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதையும் படிங்க: அரசியலை தாண்டி ஸ்டாலினுடன் நட்பு..! நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியா..? கமல்ஹாசன் பரபரப்பு தகவல்

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!