கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

Published : Feb 23, 2023, 06:36 PM IST
கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

சுருக்கம்

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் அருகே இன்று காலை தருமபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நெல்லையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கடலில் குளித்த மாணவன் பலி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் அருகே இன்று காலை தருமபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்துகொண்டிருந்த தருமபுரி மாவட்டம், சவுளூர், நூல அல்லி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, மல்லி, வசந்தி, முத்து, மற்றும் வர்ஷினி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இதையும் படிங்க: ரூ.7 கோடியை தாண்டிய பழனி முருகனின் உண்டியல் வருவாய்

இந்த சம்பவத்தில் கடும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!
கொடநாடு வழக்கில் அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை..! திடீர் கோடீஸ்வரர்களான முக்கிய மூளைகள்..! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்கள்..!