நெல்லையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கடலில் குளித்த மாணவன் பலி

Published : Feb 23, 2023, 05:16 PM IST
நெல்லையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கடலில் குளித்த மாணவன் பலி

சுருக்கம்

நண்பனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு நண்பர்களுடன் உவரி கடலில் குளிக்க சென்ற இடையன்குடி பள்ளி மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலி. 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில்  12ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவர் மதன்(வயது 17). மதன் தனது நண்பர்கள் நவீன், செல்வன், கிஷோர், சுகன் ஆகியோருடன் நண்பர்களில் ஒருவரான நவீனின் பிறந்த நாளை உவரியில் உள்ள சுகன் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்ப கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

இதனைத் தொடர்ந்து சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் கடலில் குளிக்க சென்றுள்ளனர். நண்பர்களுடன் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையின் வேகத்தில் சிக்கி மாணவர் மதன் மூச்சு திணறி பலியானார். நண்பர்கள் அவரை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மதனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மக்னாவை பிடிக்க மீண்டும் கம்பீரமாக களத்தில் இறங்கிய சின்னதம்பி யானை

மதனின்  உடலை கைப்பற்றிய கடலோர காவல் படையினர் உடல் கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவன் இறந்த சம்பவம் இடையன்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படை உதவி ஆய்வாளர் கிங்ஸ்லி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்