தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஜாய் என்பவர் கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் இருந்தவர் ஜாய் இவர் 8 வயதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அங்கிருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.
காருக்குள் ஒய்யாரமாக தூங்கிய போதை ஆசாமி; கண்ணாடியை உடைத்து பாடம் புகட்டிய மக்கள்
இவர் மீது வழக்குகள் உள்ள நிலையில் தன்னை தனது நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க சென்றபோது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்ப முடியாது வேண்டுமானால் வேறு ஒரு அதிகாரியிடம் தெரிவியுங்கள் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
குமரியில் ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஜாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் உள்ள கண்ணாடியில் தனது தலையை முட்டினார். பின்னர் உடைந்து கிடந்த ஜன்னல் கண்ணாடியை கையில் எடுத்து கழுத்தை அறுக்க முயன்றார் சுதாரித்துக் கொண்ட காவலர்கள் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதில் காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் ஜாய் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் இதைத் தொடர்ந்து அவரை பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஜாயை வளைத்து பிடித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் ஜாயை அங்கிருந்து பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்