CM Stalin Campaign : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கோவையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பிரச்சாரக் கூட்டம் இவ்வளவு பெரிய மாநாடு போல நடந்து வருகிறது என்றால் அதற்கு முதல் காரணம் மகுடம் வைத்தது போல இங்கே அமர்ந்திருக்கும் இந்தியாவினுடைய இளம் சகோதரர் ராகுல் காந்தி வருகை தந்திருப்பது தான் காரணம். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த திமுக தோளோடு தோல் நிற்கிறது.
அதேபோல எப்போதும் வெல்லுகின்ற கூட்டணி நம்முடைய கூட்டணி, அன்னை சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழக மக்கள் என்றும் தனியா பாசம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுல் அவர்களை நமது ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் "ராகுல் காந்தி அவர்களே வருக.. புதிய இந்தியாவிற்கு விடியல் தருக" என்று தான் வரவேற்க வேண்டும்.
விஜயபிரபாகரன் வெற்றி பெற்றால் எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடையும்; விஜயகாந்தின் மகன் உருக்கமான பேச்சு
கன்னியாகுமரியில் நான் ராகுலின் நடை பயணத்தை துவங்கி வைத்தேன். அண்ணா வழியில் காங்கிரஸ் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுகின்றனர். இந்த தேர்தலின் ஹீரோ யார் என்றால் கேட்டால்? காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் அது என்று கூறுவேன். திமுக தொடர்ந்து வலியுறுத்தும் சமூக கருத்துக்கள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுகிறது.
உதாரணமாக செல்ல வேண்டும் என்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், பெண்களுக்கு ஒன்றிய அரசு பணிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து, நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு, ஒன்றிய அரசின் வேலையில், 50 விழுக்காடு ஒதுக்கீட்டில் உயர்த்த சட்ட திருத்தம், SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வித்தொகை இரண்டு மடங்காக உயர்வு.
பிரதமர் மோடி அவர்கள் எப்பொழுதும் வெளிநாட்டில் டூரில் இருப்பவர், இப்பொழுது தேர்தல் வந்திருப்பதால் தான் அவர் உள்நாட்டில் இருக்கின்றார். மேடைகளில் பேசும் அவர் தனது பத்தாண்டு கால ஆட்சி குறித்து எப்போதாவது பேசுகிறாரா? அவர் பேசி ஒரே விஷயம் குடும்ப அரசியல் என்பது மட்டும்தான். இதற்கு நான் பல முறை பதில் அளித்துவிட்டேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் யாராலும் அவ்வளவு எளிதில் பதவிக்கு வந்து விட முடியாது.
ஆகவே மோடி எங்களை தவறாக பேசவில்லை, எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்த மக்களை தான் தவறாக பேசுகின்றனர். ஊழல் பற்றி பேச பிரதமருக்கு என்ன அருகதை உள்ளது, ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் காட்டினால், அதற்கு அவர் தான் வேந்தராக இருப்பார் என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசினார்.
மசினகுடியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடி பிரசாரம் செய்த எல்.முருகன்