மசினகுடியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடி பிரசாரம் செய்த எல்.முருகன்

By Velmurugan s  |  First Published Apr 12, 2024, 7:54 PM IST

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகன், பழங்குடியினருடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்ட்ட மசினகுடி, தொரபள்ளி, மண்வயல், கூடலூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பிசாரம் செய்தார். மசனிகுடி பகுதியில் பேசிய எல் முருகன், பழங்குடியினருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடியின மக்களில் படித்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறினார். 

Latest Videos

undefined

அதேபோல் வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின்பு கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.முருகன் இந்த ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பாஜகவின் ஊராட்சி தலைவர் நான்கு முறையாக வென்றுள்ளார். காரணம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதால் இந்த ஸ்ரீ மதுரை ஊராட்சி பாஜகவின் கோட்டையாக உள்ளது. 

விஜயபிரபாகரன் வெற்றி பெற்றால் எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடையும்; விஜயகாந்தின் மகன் உருக்கமான பேச்சு

கூடலூரில் உள்ள நிலப்பிரச்சனை தீர்க்கப்படும் எனக் கூறிய எல்.முருகன், இதே ஊராட்சியில் பழங்குடியின பெண்கள் வார்டு கவுன்சிலராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் எனக்கூறி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து இந்து மதத்தை இழிவாக பேசி வரும் ஆ ராசாவிற்கு பாடம் புகட்டும் வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து மீண்டும் பாரத பிரதமரை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்காகவே பிறந்த கட்சி திமுக; அண்ணாமலை கடும் விமர்சனம்

அதன் பின்பு பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய எல்.முருகன் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடிய பொழுது, அவரும் நடனமாடி மகிழ்ந்தார்.

click me!