Keezhadi Museum: கீழடி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்

Published : Mar 05, 2023, 12:55 PM ISTUpdated : Mar 05, 2023, 01:14 PM IST
Keezhadi Museum: கீழடி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்

சுருக்கம்

கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களுக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ஆம் ஆண்டு முத்ல 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. எட்டாம் கட்டமாக நடந்த அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிவுக்கு வந்தன. இந்நிலையில் இதுவரை கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்க அருங்காட்சியம் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டது.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; பீதி அடைய வேண்டாம்... ஆளுநர் ரவி வேண்டுகோள்

அதன்படி 2 ஏக்கர் பரப்பளவில் 18 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் செட்டிநாடு கட்டடக்கலை பாணியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை மார்க்கத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பண்பாட்டின் தடங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுகின்றன. 4429 மணிகள், 601 வட்டச் சில்லுகள், 80 ஆட்டக் காய்கள், 16 சுடுமண் உருவங்கள், 14 நாணயங்கள், தங்க அணிகலன்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

வட மாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய சேலம் மாவட்ட ஆட்சியர்: வைரலாகும் வீடியோ!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு