சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு.? போக்குவரத்து துறை திட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு

By Ajmal KhanFirst Published Mar 5, 2023, 12:24 PM IST
Highlights

சென்னையில் 500 தனியார் பேருந்துகளை போக்குவரத்து துறை இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போக்கவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னையில் தனியார் பேருந்து

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்துதுறை மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறது. சென்னையில் 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 29 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். திமுக அரசு பதவேற்றதும் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவையும் வழங்கி வருகிறது, மேலும் முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இதற்க்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்..! அலெர்ட் செய்யும் ஐசிஎம்ஆர்- 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

இந்நிலையில், சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Gross Cost Contract முறையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு போக்குரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து துறை ஆலோசனையில் தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் இதற்கான நடைமுறை எதையும் அரசு அனுமதிக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் போக்குவரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவிற்கு போக்குவரத்து சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்..! அண்ணாமலை மீது 4 பிரிவில் வழக்கு.! அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

click me!