நாடு முழுவதும் புதிதாக குளிர் காய்ச்சல் மற்றும் இருமல் நோய் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு A H3n2 எனும் புதிய வைரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மர்ம காய்ச்சல்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் இரண்டு வருடங்கள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தற்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து ஓமிக்ரான் என்ற வைரஸ் மக்களை மீண்டும் வாட்டி வதைத்து. இந்தநிலையில் மீண்டும் நாடு முழுவதும் மர்ம காய்ச்சல் பரவி வருவது மக்களை அதிர்ச்சஅ டைய வைத்துள்ளது. இந்த பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 92 சதவீத நோயாளிகளுக்கு காய்ச்சலுடன் இரும்பல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பும் ஏற்படுகிறது. தற்போது பள்ளி ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு தேர்தல் தோல்விக்கு யார் காரணம்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தேதி குறித்த இபிஎஸ்
அதிக காய்யல்- மூச்சு திணறல்
மூச்சு திணறல் அதிகம் உள்ள நோயாளிகள் சுவாசக் கோளாறு சரி செய்வதற்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இந்திய மருத்துவ ஆராய்சி நிறுவனர் வெளியிட்டு அறிக்கையில், நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு, A H3n2 வைரஸ்தான் காரணம் என தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் அல்ல, சாதாரண பாரசிட்டமால் மாத்திரையே இதற்கு போதுமானது என்றும் அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவலை தடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக சுகாதார நிறுவனமே நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்று இனி அதிகமாகும் என தெரிவித்துள்ளது.
1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 800இடங்களிலும், சென்னையில் 200 இடங்கள் என மொத்தமாக 1000இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மர்ம காய்ச்சல் வரும் நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்..! தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு