வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்..! தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Mar 5, 2023, 8:30 AM IST

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் வெளியாகி வரும் நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கோவையில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
 


ஹோலி பண்டிகை- சிறப்பு ரயில் 

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறப்பு குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. இதனையடுத்து ஹோலி பண்டிகைக்காக தமிழகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனையடுத்து வட மாநில தொழிலாளர்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கவுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் எண். 06049 கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவுக்கு மார்ச் 5 ஆம் தேதி இயக்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தியை பரப்பியவர்கள் பாஜக தலைவர்கள் தான்..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்த ரயில்  மார்ச் 5 ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மார்ச் 7 ஆம் தேதி (ஹோலி பண்டிகை நேரத்தில்) காலை 07.00 மணிக்கு பாட்னாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த ரயில் வட மாநில தொழிலாளர்களுக்கு வசதியாக திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், விஜயவாடா போன்ற பல்வேறு முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக, விஜயகிராமம், குர்தா சாலை, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், மிட்னாபூர், அட்ரா,அசன்சோல் ஜென், சித்தரஞ்சன் மற்றும் பாட்னாவை அடைய ராஜேந்திர நகரங்கள் வழியாக சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளோடு சேர்த்து  8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வடமாநில தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி.. விரைந்த தனிப்படை - கைது செய்யப்படுகிறாரா.?

click me!