MK Stalin : 'தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும். புதிய டைடல் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தரமணி டைடல் பூங்காவில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க : AIADMK GC Meeting Live Updates: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. வாகனம் பஞ்சர்.!
திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக மாற்ற வேண்டும். புதிய டைடல் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்தத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்திட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கென மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அளித்திட அரசு முனைந்திருக்கிறது. தொழிற்வளர்ச்சி 4.0 மூலம் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். உற்பத்தியில் தெற்காசிய அளவிலேயே தமிழகம் சிறந்த இடத்தை அடைந்துள்ளது. 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்று முதல்வர் பேசினார்.
இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?
இதையும் படிங்க : Kodanad case : மீண்டும் சூடுபிடித்த கொடநாடு வழக்கு.. சிக்கலில் இபிஎஸ்.. அடுத்து என்ன ?