கல்லூரி பேருந்து லாரி மீது மோதி விபத்து.. குடிபோதையில் ஓட்டுநர் இருந்ததாக குற்றச்சாட்டு.. 13 மாணவிகள் காயம்..

By Thanalakshmi VFirst Published Jun 24, 2022, 2:43 PM IST
Highlights

கரூரில் கல்லூரி பேருந்து ஒன்று முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட்டதால், நிலை தடுமாறி லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த 13 மாணவிகள் காயமடைந்தனர். மேலும் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மகேஷ் குடி போதையின் இருந்ததாக மாணவிகளின் பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் கல்லூரியின் பேருந்து இன்று, கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வெண்ணைமலை பேருந்து நிலையில் அருகே வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட்டதால் லாரியின் பின்புறத்தின் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் பாம்பு ஒன்று கடந்த சென்றதால் பதற்றத்தில் இரு சக்கர வாகன ஒட்டி ஒருவர் திடீரென்று வண்டியை நிறுத்தியுள்ளார். இதனால் அந்த வண்டியை பின்னால் வந்துக்கொண்டிருந்த லாரியும் பிரேக் போட்டுள்ளார்.

மேலும் படிக்க:அதிகரிக்கும் கொரோனா..தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா ? இல்லையா..? அமைச்சர் சொன்ன நச் பதில்..

லாரி பிரேக் போட்டதால், அதன் பின் சென்றுக்கொண்டிருந்த கல்லூரி பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதியுள்ளது.  இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுள்ளது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 13 மாணவிகள் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அந்த கல்லூரி பேருந்தை ஓட்டி வந்த மகேஷ் எனபவருக்கு மது  பழக்கம் இருப்பதாகவும் இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் இதுக்குறித்து புகார் செய்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கல்லூரி பேருந்தில் ஏறும் மாணவிகள் ஓட்டுநரிடம் இதுக்குறித்து கேட்டால், விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறு இல்லை என்றால் கீழே இறங்கு என மிரட்டுவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க: தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை.. எந்தெந்த பகுதிகளில் அலர்ட்..? வானிலை அப்டேட்..

click me!