
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியானது. இந்தாண்டில் 12 ஆம் வகுப்பு 93.76 %, 10 ஆம் வகுப்பு 90.07% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை.. மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை போட்ட உத்தரவு.. மீறினால் நடவடிக்கை
மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 , பத்தாம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும்; பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும்; 10ம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 ஆம் தேதி வரையிலும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா..தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா ? இல்லையா..? அமைச்சர் சொன்ன நச் பதில்..