அதிகரிக்கும் கொரோனா..தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா ? இல்லையா..? அமைச்சர் சொன்ன நச் பதில்..

By Thanalakshmi VFirst Published Jun 24, 2022, 12:38 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் புதிய கட்டுபாடுகள் கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். கொரோனா உயிரிழப்பு  குறைவாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும் என்றும் பொதுமக்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் புதிய கட்டுபாடுகள் கிடையாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். கொரோனா உயிரிழப்பு  குறைவாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும் என்றும் பொதுமக்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்று சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளாதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் போது கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க: அதிகரிக்கும் உயிரிழப்பு.. ஒரே நாளில் 38 பேர் பலி.. 13 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா..

கொரோனா தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறிய அமைச்சர், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 92% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 % பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கும் பெரிதாக பாதிப்பு ஏதுவும் இல்லை என்று விளக்கினார். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கேஎம்சி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் என ஒவ்வொரு மருத்துவமனையிலும் 200 முதல் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சென்னையில் கொரோனா கேர் சென்டர் தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் மூன்று முதல் நான்கு இடங்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தற்போதைக்கு கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்த அவர், கொரோனாவால் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும் என்றார். பொதுமக்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: அலர்ட்டில் சுகாதாரத்துறை.. அச்சத்தில் மக்கள்.. 17 ஆயிரத்தை கடந்த கொரோனா.. விதிக்கப்படுமா கட்டுபாடுகள்..?

click me!