குடும்ப அட்டைதாரரர்களுக்கு ஆயிரம் ரூபாய்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் !!

By Raghupati R  |  First Published Nov 14, 2022, 6:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும்  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !

click me!