ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடல்...! திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு...!

Mar 8, 2018, 4:30 PM IST

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து திரையரங்குளையும் மூட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

தயாரிப்பாளர்கள் மார்ச் 1 முதல் புதுப்படங்களை வெளியிடாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டிஜிட்டல் கட்டண உயர்வு பிரச்சனையில் முடிவு எதுவும் எட்டப்படததால் திரையரங்குகள் மூடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஜூலை மாதம் தியேட்டர் டிக்கெட் விலையில் ஜிஎஸ்டி இணைக்கப்பட்டு மேலும் கேளிக்கை வரியும் சேர்த்து வசூல் செய்வதை கண்டித்து தியேட்டர்களை மூடி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். 

இதயடுத்து அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்டன. 

இந்நிலையில், தற்போது மீண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 