சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பழைய பேருந்த நிலையம் அருகே திருமணிமுத்தாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் படிப்பறிவற்ற பட்டியலின மக்கள் அரசு பணிப்பெற்ற டி பிரிவு மற்றும் நான்காம் நிலை பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது, உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் நியமனம் செய்த அனைத்து தூய்மை தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் வார விடுமுறை, ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சேலம் மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக பணியிட மாற்றங்களை செய்யக் கூடாது. கூட்டுறவு கடன் மற்றும் பிஎஃப் ஆகியவற்றில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் மீதும் உரிய விசாரணை நடத்தி சம்பத்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதவிலக்கு காலங்களில் பெண் தொழிலாளர் மீது கடுமையான பணிகளை திணிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சாரட்டு வண்டியில் சீர் வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட தவளைகள்; மழை வேண்டி மக்கள் வினோத வழிபாடு
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் இறங்கி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூய்மை பணியாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.