தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
கும்பக்கரையில் வெள்ளப் பெருக்கு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கும்பக்கரை அருவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தற்போது அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும்,அருவியை பார்வையிடவும் தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்