தமிழகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு..

By Ramya s  |  First Published Dec 25, 2023, 7:40 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.


இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தேவலாயங்கள் மற்றும் திருத்தலங்களில் நேற்று இரவு முதல் கூட்டு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் மின்னொலியில் ஜொலித்த நிலையில் ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டிருந்தது.

Latest Videos

undefined

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறிப்பாக வேளாங்கண்ணி தேவாலயம், சென்னை சாந்தோம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. மேலும் நள்ளிரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலி நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை கிண்டி அருகே உள்ள பரங்கி மலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சாந்தோம் தேவாலயத்தில் திராளானோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Christmas 2023 : வந்தாச்சு கிறிஸ்துமஸ்.. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இந்த 5 கிப்ட்களை கொடுத்து அசத்துங்க..

மதுரை கீழவாசலில் உள்ள தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி மேலபுதூர் தூய மரியன்னை ஆலயத்தில் நடந்த கூட்டுத்திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

click me!