எல்.இ.டி பல்பை விழுங்கிய 10 மாத குழந்தை.. மூச்சு குழாயில் சிக்கிய பல்பு.. ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை..

By Thanalakshmi VFirst Published Aug 12, 2022, 5:33 PM IST
Highlights

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 10 மாத குழந்தை விளையாட்டு பொருளில் இருக்கும் சிறிய அளவிலான எல்.இ.டி பல்பை விழுங்கிய நிலையில், ஒரு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அதனை தஞ்சை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் வெளியில் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
 

அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சங்கர் என்பவர்,  இவர் பொன்பரப்பியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் 2-வது மகன் தமிழ்முகிலன், பிறந்து 10 மாதமே ஆகிறது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தமிழ்முகிலன், விளையாட்டு பொருளில் பொருத்தப்பட்டிருக்கும் எல்.இ.டி பல்பை எடுத்து , வாயில் வைத்து அப்படியே விழுங்கியுள்ளார். இதனை கண்ட குழந்தையின் பெற்றோர் பதறி அடித்து, அரியலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க:கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்… எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர்!!

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையின் ஸ்கேன் செய்து பார்த்ததில், மூச்சுக்குழாயில் 2 சிறிய கம்பிகள் நீட்டிக்கொண்டிருந்த நிலையில் எல்.இ.டி. பல்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து தான் பல்பை வெளியில் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களின் சம்மதத்தை அடுத்து, சுமார் ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் வயிற்றிலிருந்து வெற்றிகரமான மருத்துவர்கள், அந்த சிறிய அளவிலான எல்.இ.டி பல்பை வெளியில் எடுத்தனர். தற்போது குழந்தையில் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:லுங்கி அணிந்து கமிஷ்னர் அலுவலகம் வருவதற்க்கு தடையா..? ஜெய்பீம் ராஜகண்ணு உறவினருக்கு அனுமதி மறுத்த காவல்துறை

இதுக்குறித்து பேசிய மருத்துவர், குழந்தை எளிதில் விழுங்க கூடிய பொருட்களை அவர்களது கைக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் குழந்தை விழுங்கிய பல்பு உணவுக்குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை உருவானது என்று விளக்கினார். தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் நன்றாக மூச்சு விடுவதாகவும் அவர் கூறினார். 

மேலும் குழந்தைகள் எதையாவது விழுங்கி விட்டால் கையை விட்டும் அகற்றும் முயற்சியில் ஈடுபடாமல், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். குழந்தையின் தந்தை சங்கர் பேசுகையில், மூச்சு விட முடியாமல் குழந்தை மிகவும் சிரமப்பட்டான். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவர்கள் உரிய சிகிசை அளித்ததால் எனது குழந்தையின் உயிர் திரும்ப கிடைத்துள்ளது என்று உருக்கமாக பேசிய அவர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 

மேலும் படிக்க:இன்று ஸ்ரீமதி பிறந்த நாள்.. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெற்றோர் செய்த மனதை உருக்கும் காரியம்.

click me!