உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்.! எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி -ஸ்டாலின் பெருமிதம்

By Ajmal Khan  |  First Published Jan 9, 2024, 9:21 AM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமான நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தான்.  'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்! என குறிப்பிட்டுள்ளார். 


உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 5.5லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி  6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் , அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு… pic.twitter.com/AmrWizWiD2

— M.K.Stalin (@mkstalin)

Tap to resize

Latest Videos

இந்தியாவே வியக்கும் வெற்றி

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!   இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம்

நமது திரவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தான்.  'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்! என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு.. மொத்த முதலீடுகளின் அளவு எவ்வளவு தெரியுமா? மகிழ்ச்சியோடு அறிவித்த முதல்வர்!

click me!