வாய்ப்புகளை பறிப்பதா.! சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள்.! ஸ்டாலின் அதிரடி

By Ajmal KhanFirst Published Aug 20, 2024, 10:44 AM IST
Highlights

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு புதிய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இட ஒதுக்கீடு பறிப்பு

மத்திய அரசு பணிகளில் ' லேட்டரல் என்ட்ரி ' மூலம் ஆட்களை நியமித்து ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சமூகநீதியை நிலைநாட்டவும், இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும். லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும்; தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். 

Latest Videos

பாஜக எங்கிருக்கிறதோ அங்கு நாங்கள் இருக்க மாட்டோம்.! திமுகவை அலறவிட்ட கம்யூனிஸ்ட்

‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்கனும் 

ஒன்றிய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நியாயமான, சமத்துவமான முறையில் பதவிஉயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடுக

அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட - நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விற்பனைக்கு வந்த கருணாநிதி நாணயம்; எப்படி வாங்கனும்? எவ்வளவு விலை தெரியுமா?

click me!