விற்பனைக்கு வந்த கருணாநிதி நாணயம்; எப்படி வாங்கனும்? எவ்வளவு விலை தெரியுமா?

By Velmurugan sFirst Published Aug 19, 2024, 7:27 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் வெளியிடப்பட்ட நிலையில், அதனை எங்கே வாங்கலாம், எவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என பார்க்கலாம்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கருணாநிதியை புகழ்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் எளியவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி என புகழ்ந்தார்.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ சங்கரின் இல்ல திருமண விலைவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாணயம் அறிவாலயத்திற்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அறிவாலயத்திற்குச் சென்று நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Latest Videos

வயநாடு நிலச்சரிவு; தேடி வந்த உதவி தொகையை கடனுக்காக பிடித்தம் செய்த வங்கிகள் - முதல்வர் அதிருப்தி

நூறு ரூபாய் நாணயத்திற்கு மதிப்பு 10,000 ரூபாய். யார் வேண்டுமானாலும் ரூ.10 ஆயிரம் செலுத்தி நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த நாணயத்திற்கு மதிப்பே கிடையாது என்றார். தொடர்ந்து பேசுகையில், நாணயம் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த ராஜ்நாத் சிங் கலைஞரின் நினைவிடத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கேட்டார். அதன் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நினைவிடத்தை பார்த்துவிட்டு இது போன்று எங்கும் பார்த்ததே இல்லை என்று பாராட்டிவிட்டு சென்றார்.

மாணவர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை; அரசுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

மேலும் விழா மேடைக்கு வந்தவுடன் அனைவரையும் எழுந்து நின்று கலைஞருக்கு மரியாதை செலுத்துமாறு கூறியது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனை என்னால் மறக்க முடியவில்லை என்று பேசினார்.

click me!