பாஜக ஆட்சியில் 74% அதிகரித்த வெறுப்பு பேச்சு.. மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைப்பதா..? ஸ்டாலின் ஆவேசம்

Published : Dec 25, 2025, 02:16 PM IST
mk stalin

சுருக்கம்

ஜபல்பூரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் வெறுப்பு பேச்சு 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது!

பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.

மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி 'இதை' செக் பண்ணாம பேருந்து எடுக்க முடியாது.. அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த உத்தரவு!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!