CM Stalin Campaign : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தியா கூட்டணி காட்சிகளை ஆதரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. ஒன்றிய அரசு சாதி வாரியான கணக்கீட்டை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் சமூக நலனை காக்கும் பொருட்டு ஒரு நல்ல அரசை ஒன்றியத்தில் அமைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்து வருகிறோம்.
இந்த வகையில் இந்தியா கூட்டணி மக்களின் நலனுக்காக பாடுபடும் கூட்டணியாக உள்ளது. இந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்தின் உயர்வுக்காக பாடுபடும் கழகம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் சமூக நீதிப் பற்றி பேசும் மருத்துவர் ஐயா அவர்கள் சமூகநீதிக்கு எதிராக செயல்படும் பாஜகவோடு கைகோர்த்த மர்மம் என்ன?
அண்ணாமலைக்கு இந்த உத்தரவுதான் போட்டுள்ளேன்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!
பாமக வலியுறுத்துகிற ஒரு கொள்கையை கூட ஆதரிக்காத, அதற்கு முற்றிலும் எதிரான கொள்கை கொண்ட கட்சி தான் பாஜக. இது மூத்த தலைவரான மருத்துவர் அய்யா அவர்களுக்கு தெரியாதா? இதை நான் மட்டும் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பாமக தொண்டர்கள் அனைவரும் கூறுகின்றனர். இப்பொழுதும் கூட பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை முழுமையாக க்ளோஸ் செய்ய எவ்வளவு விஷயங்களை பாஜக செய்திருக்கிறது தெரியுமா?.
அதை எல்லாம் ஐயா ராமதாஸ் மறந்து விட்டாரா?. ஜாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தவும், இட ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் மட்டுமே. நமது அன்பு சகோதரர் ராகுல் காந்தி தான் செல்லும் இடமெல்லாம் இதைப்பற்றி நான் பேசுகின்றார். சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு எடுக்க வேண்டிய ஒன்று.
அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம் மட்டுமே இருக்கின்றது, மாநில அரசால் சர்வே மட்டுமே எடுக்க முடியுமே அன்றி ஒன்றிய அரசால் மட்டுமே சென்சக்ஸ் எடுக்க முடியும். இந்த நடைமுறைகள் எல்லாம் சமூகநீதி போராளியான ஐயா ராமதாஸ் அவர்களுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் தெரிந்தே இந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதையின் காரணமாக நான் இதற்கு மேல் அவரைப் பற்றிய எதுவும் பேச விரும்பவில்லை என்றார் முதல்வர் ஸ்டாலின்.